பிரபல ஸ்டண்ட் கலைஞருக்கு ஏற்பட்ட சோகம்.. உதவி கேட்டு வீடியோ…! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக தனது பயணத்தை தொடங்கியவர் வெங்கல் ராவ். அதன்பிறகு, காமெடியில் கவனம் செலுத்த துவங்கிய இவர், வைகை புயல் வடிவேலுவுடன் இணைந்து கந்தசாமி போன்ற 30க்கும் மேற்ப்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
வடிவேலு சினிமாவை விட்டு விலகிய பின் இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கமால் தவித்த நிலையில் நாளடைவில் அவரும் சினிமாவிலிருந்து விலகினார்.
இந்நிலையில், இவர் தறபோது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது கை, கால் செயிழந்து போயுள்ளது என்றும், தனக்கு சினிமா நடிகர்கள் உதவி செய்யுங்கள் என்றும், கோரிக்கை விடுத்துள்ளார் இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்கள் தொடர்ந்து நலிவடைந்து வருவதும், உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு கூட பணமின்றி அவதிப்பட்டு திரையுலகை சேர்ந்தவர்களிடம் உதவி கேட்பதும் வேதனைக்குரியதாக உள்ளது.
வடிவேலுவுடன் பல படங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தவர் போண்டா மணி. இலங்கையை சேர்ந்த இவர் தமிழகம் வந்து பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வந்தவர்.
இவரும் சில மாதங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உதவும்படி கோரிக்கை வைத்தார். அவருக்கு விஜய் சேதுபதி உள்ளிட்ட சிலர் உதவினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-பவானி கார்த்திக்