தைவானில் ஏற்பட்ட அதிர்வு..!! மீண்டும் மீண்டும் அபாயமா..? வேதனையில் மக்கள்..!!
தைவானின் கிழக்குக் கடற்கரையில் இன்று அதிகாலை 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தைவான் மக்கள் உதவி வேண்டி தவித்து வரும் நிலையில், தைவான் தீவு மற்றும் அதனை சுற்றியுள்ள அண்டை நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
விரிவான தொகுப்பு :
அமெரிக்காவின் தைவான் ஹுவாலியன் (Hualien) நகருக்கு தெற்கே உள்ள பகுதிகளில் இந்த நிலநடுக்கம், ஏற்பட்டுள்ளது. அதாவது இந்திய நேரப்படி அதிகாலை 5:30 மணி என்று சொல்லலாம் 15.5 கி.மீ வரை தாக்கி இருக்க கூடிய இந்த நிலநடுக்கம் ஒன்பது பின் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ஹுவாலியனில் பல கட்டிடங்கள் பாதி இடிந்த நிலையிலும் ஆபத்தான கோணங்களில் சாய்ந்த நிலையிலும் காணப்படுகிறது. தைவானில் கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்டிடாத மிகப்பெரிய நிலநடுக்கம் இவை தான் என்று தகவல் வெளியாகியுள்ளது.
திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களால் ஹுவாலியன் வாழ இருப்பிடம் இன்றியும், உண்ண உணவு இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஹுவாலியன் மக்கள் அந்நாட்டின் அதிபர்களுக்கு உதவி வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த தகவலை அறிந்து வந்த தைவானிய சிப் தயாரிப்பு நிறுவனமான டி.எஸ்.எம்.சி (TSMC), அப்பகுதி மக்களை, மீட்டு பாதுகாப்பிற்காக சின்ச்சு (Hsinchu) மற்றும் தெற்கு தைவானில் உள்ள சில தொழிற்சாலைகளை களில் தஞ்சம் அடைய வைத்துள்ளது . மேலும் பாதுகாப்பு அமைப்புகள் எப்போதும்போல இயங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதன் பின் ஆப்பிள் மற்றும் என்விடியா உள்ளிட்ட பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான செமிகண்டக்டர்களின் முக்கிய தயாரிப்பாளராக டி.எஸ்.எம்.சி நிறுவனத்தின் பிரதிநிதிகளும் உதவி செய்ய முன்வந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அண்டை நாடான ஜப்பான் மற்றும் தென்மேற்கு கடற்கரைகளில் சுனாமி அபாயம் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அதன்பின்னர், ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் இந்த எச்சரிக்கையின் தீவிரத்தைக் குறைத்து, மக்கள் விழிப்புடன்’ இருக்குமாறு கேட்டுக் கொண்டது.
நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே பிலிப்பைன்ஸின் நாட்டில் நில அதிர்வு ஏற்பட்டிருப்பதால் அங்கும் சுனாமி எச்சரிக்கை விடபட்டுள்ளது. மேலும் மக்கள் உயரமான பகுதிகளுக்கு சென்று தங்கம் அடைந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதன்பின் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் நிலநடுக்கம் ஏற்பட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, சுனாமி அச்சுறுத்தல் குறைந்து விட்டதால், சுனாமி அபாயம் குறைந்து விட்டதாக தெரிவித்துள்ளது.
சீனாவின் தென்கிழக்கு புஜியான் மாகாணத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக சீன அரசு ஊடகம் தெரிவித்திருந்தநிலையில் அவற்றின் அதிர்வுகள் குறைந்து சுனாமி அபயாம் ஏற்பட வாய்ப்புகள் இல்லையென தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் நிலத்திற்கு அருகில் உள்ளது. ஆழமற்றதாக உள்ளது. இது தைவான் மற்றும் அதன் தீவுகள் முழுவதும் உணரப்பட்டுள்ளது. இது 25 ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்களிலேயே மிகவும் வலுவானது,” என்று தைபேயின் நில அதிர்வு மையத்தின் இயக்குனர் வூ சியென் ஃபூ கூறினார்.
இதற்குமுன், 1999-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தைவானில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 2,400 பேர் இறந்தன, 5,000 கட்டிடங்கள் இடிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..