துணை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய வேண்டும்..!! நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீஸ்..!!
மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எதிராக இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர்.
இந்திய நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை சபாநாயகர் ஓம்.பிர்லாவிற்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் நாடாளுமன்ற மாநிலங்களவையின் அவைத்தலைவராகவும் இருக்கிறார்.
நடப்பு கூட்டத்தொடரில் அதானி முறைகேட்டை அவையில் எழுப்ப எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரசுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையேயான தொடர்பு குறித்த குற்றச்சாட்டை பரப்ப தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.களுக்குக்கு அனுமதி அளித்துள்ளார்.
இது எதிர்க்கட்சிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே துணை ஜனாதிபதி பதவியில் இருந்து அவரை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் பரிசீலித்துள்ளனர். இதற்கிடையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கான நோட்டீஸ் அளிக்கும் காங்கிரசின் யோசனையை திமுக, திரிணாமுல் காங்கிரஸ், மற்றும் சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே இந்திய நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை அவை தலைவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..