காஸாவில் நிறுத்தப்பட்ட போர்..!! போரில் அமெரிக்கா பின் வாங்க இது தான் காரணமா..? ஐநா தீர்மானம்..?
இஸ்ரேல் பாலஸ்தீன மோதல் வரலாறு :
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே தற்போது நடந்து வரும் இரத்தக்களரி மோதலைப் புரிந்து கொள்ள, அந்த இடத்தின் பின்னணியையும் அதனுடன் தொடர்புடைய மக்களையும் புரிந்துகொள்வது அவசியம். தற்போதைய மோதலின் வேர்கள் 20 ஆம் நூற்றாண்டில் இருந்தாலும், பண்டைய வரலாற்றைப் பொறுத்தமட்டில் இப்பகுதியின் சுருக்கமான பின்னணி, அந்த இடத்தின் மத மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள உதவும், குறிப்பாக மோதலில் முக்கிய பங்குதாரர்களுக்கு.
இஸ்ரேல் மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு சிறிய நாடாகும், இது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயா அல்லது மணிப்பூரைப் போன்றது. இஸ்ரேல் அதன் மேற்கில் மத்தியதரைக் கடல், தெற்கில் எகிப்து, கிழக்கில் ஜோர்டான் மற்றும் சிரியா மற்றும் வடக்கே லெபனான் ஆகியவற்றால் எல்லையாக உருவானது.
இஸ்ரேல் யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு சமய முக்கியத்துவம் வாய்ந்த பல தளங்களைக் கொண்டுள்ளது மற்றும் சிக்கலான வரலாற்றைக் கொண்டது. இஸ்ரேலின் மக்கள் தொகையில் பெரும்பாலும் யூதர்கள் உள்ளனர், இருப்பினும் சிறுபான்மையினர் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் இருக்கின்றனர்.
1517 முதல் 1917 வரை, ஒட்டோமான் பேரரசு இஸ்ரேல் மேற்கு ஆசியாவின் பெரும்பகுதியை ஆட்சி செய்தது. 19 ஆம் நூற்றாண்டில், இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 87% முஸ்லிம்கள், 10% கிறிஸ்தவர்கள் மற்றும் 3% யூதர்கள் என எல்லா கணக்குகளிலிருந்தும், ஒருவருக்கொருவர் சமாதானமாக வாழ்ந்து வந்தனர்.
19 ஆம் நூற்றாண்டில், ஆஸ்ட்ரோ-ஹங்கேரிய யூத பத்திரிகையாளர் தியோடர் ஹெர்சல், யூதர்களுக்கு பாலஸ்தீனத்தில் யூத தாயகம் என்ற கருத்தை பிரச்சாரம் செய்ய தொடங்கியது. இந்த யோசனை சியோனிசம் என்று அழைக்கப்பட்டது.
இந்த சியோனிசமை ஐரோப்பிய யூதர்கள் பலர் பின்பற்றி வந்துள்ளனர். அப்படி பின்பற்றியவர்களை கண்டறிந்தது, யூதர்கள் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்ய தொடங்கினார்கள்.
1917 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் அரசாங்கம் பால்ஃபோர் பிரகடனம் என்ற ஒன்றை அறிவித்தது , முதலாம் உலகப் போருக்கு யூத ஆதரவைப் பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில், பாலஸ்தீனத்தின் யூத மக்களுக்கு ஒரு தேசிய இல்லத்தை வழங்குவோம் என உறுதியளித்தது.
அதற்கு முன் 1916ம் ஆண்டே ஆங்கிலேயர்கள் பிரெஞ்சுக்காரர்களுடன் இரகசிய ஒப்பந்தமிட்டுள்ளனர். அதனால், போருக்குப் பிறகு அரபுப் பகுதிகள் பிரிக்கப்பட்டு பாலஸ்தீனம் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இதனால் பாலஸ்தீன மக்கள் பெரும் சிக்கலை எதிர்கொண்டனர். அதன்பின் பாலஸ்தீனத்தில் உள்ள அரேபியர்கள் இந்த பிரகடனத்தை எதிர்கொண்டு போரட்டத்தை தொடங்கினார்கள்.
இந்த பிரகடனத்தைத் தொடர்ந்து, 1948 இல், ஈராக், சிரியா, லெபனான், ஜோர்டான் மற்றும் எகிப்து ஆகிய ஐந்து அரபு நாடுகளுடன் அரபு இஸ்ரேல் போர் வெடித்தது, இஸ்ரேலை ஆக்கிரமிக்க தொடங்கியது.
1949ம் ஆண்டில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டும் கூட போர் நிறுத்தப்படாதல் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மேற்குக் கரை ஜோர்டானுக்கு வழங்கப்பட்டது. மற்றும் காசா பகுதி எகிப்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. போரில் வெற்றி பெற்ற இஸ்ரேல், தற்போது ஐ.நா. திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
பாலஸ்தீனம் காஸா மீது கடந்த 5 மாதத்திற்கும் மேலாக இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த போர் தற்போது வரை முடிவிற்கு வராமல் உள்ளது. இந்நிலையில், ரமலான் மாதத்தை முன்னிட்டு காஸாவில் இஸ்ரேல் தொடங்கிய இந்த போரை உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
அதற்கான அறிக்கையை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்டது. முந்தைய தீர்மானங்களை அமெரிக்கா ரத்து செய்த நிலையில், நேற்று மீண்டும் ஐநாவில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி காஸாவில் உடனடியாக இஸ்ரேல் போர் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய போரில் முதல் பிணைக் கைதிகளாக பிடித்த அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யக்கோரி காஸா மக்கள் மனு தாக்கல் செய்யதனர். அதற்காக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வாக்களிக்கும் செயல் நடைபெற்றது. ஐநாவின் 15 உறுப்பினர்களில் அமெரிக்காவை தவிர மீதமுள்ள 14 உறுப்பினர்களும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
தீர்மானத்தில் இருந்து அமெரிக்கா ஒதுங்கியே இருந்தது. இதனால் இஸ்ரேல் மீது அமெரிக்கா கடும் அதிருப்தியை கொண்டிருப்பதாக தெரியவந்தது. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை கொண்டு ரத்து செய்தது.
அதற்கு முன் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இஸ்ரேலுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. காஸா மீது இஸ்ரேல் போர் தொடங்கி ஏறத்தாழ 5 மாதங்கள் கடந்த நிலையில், தற்போது முதல் முறையாக ஐநாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய இந்த போரில், இஸ்ரேலில் நடத்திய இந்த தாக்குதலில் ஏறத்தாழ 32 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக ஒரு தகவல் வெளியானது.
இதனால் பலரும் தங்களது சொந்த நாட்டை விட்டு மற்ற நாட்டிற்கு அகதிகளாக சென்று தஞ்சம் அடைந்தனர். இதனால் இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் காஸா பகுதியில் பஞ்சத்தை விட மிக கொடூமையான சூழல் நிலவுவதாக காஸா
மக்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..