கணவன் தற்கொலை செய்த விரக்தியில் மனைவியும் தற்கொலை..!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம், கொளத்தூர் சேர்ந்த அஜித் குமார் என்பவருக்கும் புதுச்சேரியை சேர்ந்த திவ்யபாரதி (வயது 23). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது.
தம்பதிகளுக்கு சர்வேஷ் என்ற ஒரு வயதுடைய மகன் இருக்கிறார். காவலராக பணிபுரிந்து வந்த அஜித் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். கூடுதல் மகிழ்ச்சியை தரும் வகையில், திவ்யபாரதி இரண்டாவது முறையாக கருத்தரித்து நான்கு மாத கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார்.
இதனிடையே, கடந்த ஜூன் 28ம் தேதி அஜித் திடிரேன பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனால் கணவரை இழந்த சோகத்தில் திவ்யபாரதி மிகுந்த மனவருத்தத்துடன் தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இதனிடையே, நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அச்சமயம் மகளின் அறைக்கு எதிர்பாராத விதமாக தாய் சென்ற நிலையில், அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கர்ப்பிணியை மீட்டனர்.
அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி திவ்யபாரதி, பரிசோத்தித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த கலசப்பாக்கம் காவல்துறையினர், திவ்யபாரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடந்து வருகிறது. கணவன் தற்கொலை செய்த விரக்தியில், மனைவியும் உயிரை மாய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்