சரியான நேரத்தில் கணவனை காட்டி கொடுத்த மனைவி.. பாய்ந்தது வழக்கு.. அதிர்ச்சியில் வாலிபர்..!
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சிவ பிரசாத்(36). இவர் ஜான்சி என்ற பெண்ணை கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்தநிலையில் சிவ பிரசாத் குடும்பத்துடன் வேலை காரணமாக திருப்பத்தூரில் வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து வசித்து வந்துள்ளார்.
கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான அவர் தினமும் தனது மனைவியை அடித்து கொடுமை செய்து வந்துள்ளார். மேலும் தனது வீட்டின் மாடியிலேயே யாருக்கும் தெரியாமல் கஞ்சா செடியையும் வளர்த்து வந்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி இதனால் தான் தினமும் தன்னை அடித்து கொடுமை செய்து வருவதால் இதனை போலீசில் கூற முடிவு செய்த அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பறந்த போலீசார் மாடியில் இருந்த கஞ்சா செடிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து, வழக்கு பதிவு செய்த போலீசார் சிவ பிரசாதை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்