கஞ்சா கொடுத்து தோழியை கணவனுக்கு விருந்தாக்கிய மனைவி.. புகாரில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!
ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியை சேர்ந்த 23 வயது இளம் பெண். இவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படித்து வரும் இவருக்கு அதே கல்லூரியில் படிக்கும் பிரணவ கிருஷ்ணா (35) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இளம் பெண் தனது தோழியான பிரணவ கிருஷ்ணா வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் வழக்கம் போல் தனது தோழியின் வீட்டிற்கு இளம் பெண் சென்றுள்ளார். அப்போது அவருக்கு தெரியாமல் பிரணவ் கஞ்சாவை கொடுத்துள்ளார். அதை பயன்படுத்திய சிறிது நேரத்தில் மயங்கிய மாணவியை தனது கணவன் கிருஷ்ண கிஷோர் மூலம் பாலியல் பலாத்காரம் செய்ய வைத்து அதனை வீடீயோவாக பிரணவ கிருஷ்ண பதிவு செய்துள்ளார்.
பின்னர் மயக்கம் தெளிந்த மாணவியிடம் அந்த வீடியோவை காட்டி கணவன் மனைவி இருவரும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அதற்கு மாணவி தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால் அந்த வீடியோவை அவரது சகோதரர் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பி உள்ளனர்.
இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கணவன் மனைவி இருவரையும் கைது செய்து திவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்