ஒற்றை விரால் பேருந்தை இழுத்த பெண்…!! குவியும் பாராட்டு..!!
உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மாதம் தோறும் கிரிவலம் நடைபெறும்.. அப்படி பக்தர்கள் செல்லும் கிர்வலம் பாதையில் அசுத்தமாக இருப்பதாகவும்., எத்தனை முறை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்தாலும் மீண்டும் ஆங்காங்கே குப்பை போல காட்சி அளிப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது அதற்கு பல்வேறு சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்..
அப்படி இருக்கையில் இதுகுறித்து விழிபுணர்ச்சி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக யோகா மற்றும் சிலம்ப பயிற்சியாளர் கல்பனா செய்த செயல் மெய் சிலிர்க்க வைத்துள்ளது.,
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நெகிழிப் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கவும், சுற்றுச்சூழலை பேணி காப்பாற்றவும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், நேற்று சிவனடியார்கள், மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் யோகா மற்றும் சிலம்ப பயிற்சியாளர் கல்பனா என்பவர் ஐந்து டன் எடை கொண்ட மினிபேருந்தை 250 மீட்டர் தூரம், கயிறு கட்டி ஆள்காட்டி விரல் மற்றும் நடு விரலால் இழுத்து சென்று சாதனை படைத்துள்ளார்..
சுற்று சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சாகசம் செய்த பயிற்சியாளர் கல்பனாவை பலரும் பாராட்டி வருகின்றனர்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..