பா.ஜ.க.வுக்கு ‘இந்தியா’ என்ற சொல்வே கசக்கிறது போல.. மத்திய அரசை விளாசிய முதலமைச்சர் ஸ்டாலின்..!!
ஜி 20 மாநாட்டை முன்னிட்டு செப்டம்பர் 9ம் தேதி இரவு விருந்து நடைபெற இருக்கிறது, இந்த விருந்தில் கலந்து கொள்ள குடியரசு தலைவர் மாளிகையில் இருந்து அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த அழைப்புக் கடிதத்தில், இந்தியக் குடியரசுத் தலைவர் என்று போடுவதற்குப் பதிலாக, “பாரத குடியரசுத் தலைவர்” எனக் குறிப்பிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு அழைப்பு வந்துள்ளது.
பொதுவாக, இதுபோன்ற அழைப்பிதழ் களை “ராஷ்டிரபதி பவன்” என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், இப்போது இந்தியா என்பதற்குப் பதிலாக “பாரதம்” என்ற சொல் பெயரிடப் பட்டிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் “ஜெய்ராம் ரமேஷ்” கண்டனம் தெரிவித்துள்ளார்.
After Non-BJP forces united to dethrone the fascist BJP regime and aptly named their alliance #INDIA, now the BJP wants to change 'India' for 'Bharat.'
BJP promised to TRANSFORM India, but all we got is a name change after 9 years!
Seems like the BJP is rattled by a single term…
— M.K.Stalin (@mkstalin) September 5, 2023
இந்நிலையில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், “பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு ‘இந்தியா’ (INDIA) என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்து வருகிறது” என ட்விட் செய்துள்ளார்.
மேலும், “இந்தியாவை வளர்ச்சி மிகுந்த நாடாக மாற்றப் போகிறோம்” என சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும் தான் மாற்ற முயற்சித்து வருகிறது என விமர்சித்துள்ளார்.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயயா தெரியுமா.. அதுமாதிரி பாஜகவிற்கு “இந்தியா” என்ற சொல்லே அச்சுறுத்துகிறது, வருகிற தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..