சூர்யாவுக்கு வயிற்றெரிச்சலை கொடுக்கும் வணங்கான்..! பாலா நச் பதில்..!
இந்தியன் :
1996ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ஏ.எம் ரத்தினம் தயாரிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் ரிலிஸை தொடர்ந்து இதற்கு போட்டியாக ரஜினியின் பாட்ஷா திரைப்படம் வெளியானது.
இருப்பினும் பாட்ஷா வசூலை இந்தியன் திரைப்படம் முறியடித்தது. தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வரும் நிலையில் இந்தியன் திரைப்படம் வரும் ஜூன் மாதம் திரையரங்கில் ரீ ரிலிஸ் ஆக இருக்கிறது.
இந்தியன் 2 :
பெரும் எதிர்பார்ப்பிற்கு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. தற்போது இதன் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் ஜூலை
12ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு போட்டியாக இன்னொரு பெரிய இயக்குநரின் திரைப்படமும் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலாவின் வணங்கான் :
இயக்குநர் பாலா சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை தொடங்கினார். ஆனால் ஒரு மாத படப்பிடிப்புக்கு பிறகு சூர்யா அந்த படத்தில் இருந்து விலகினார். அதையடுத்து அருண் விஜய் நடிப்பில் மீண்டும் அப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார் பாலா. தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வணங்கான் படம் ஜூலை மாதம் வெளியாகும் என அதிகாரபுர்வ தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இதே ஜூலை மாதத்தில் இந்தியன் 2 படமும் திரையரங்குக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாலா விளக்கம் அளித்துள்ளார்.
இயக்குநர் பலா :
பொதுவாக இயக்குநர் ஷங்கர் திரைப்படங்கள் வெளியாக போவதென்றால் நல்ல வரவேற்பு இருக்கும் அதிலும் கமல் ஹாசன் திரைப்படமும் எதிர்பார்ப்பிற்குரியது. இந்நிலையில் பாலாவிடன் கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு விளக்கம் அளித்த பாலா
நேரம் நன்றாக இருந்தால் ஜூலை 12ஆம் தேதியே இந்தியன் 2 க்கு போட்டியாக வணங்கான் ரிலீஸ் ஆகும் ஏன்னென்றால் வணங்கான் படம் அவ்வளவு அருமையாக வந்திருக்கிறது. நிச்சயமாக இந்த படம் சூப்பர் ஹிட் ஆகும் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.
சூர்யாவுக்கு வயிற்றெரிச்சலை கொடுக்கும் வணங்கான்:
இந்த படம் வெற்றி பெற்று சூர்யாவின் மூக்கை உடைக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறார் பாலா. சூர்யாக்கு இந்த ஹிட் ஒரு வயிற்றெரிச்சலை கொடுக்கும் என வணங்கான் மொத்த படக்குழுவினரும் கூறி வருகின்றனர்.