”தனி குடித்தினம்”.. திருமணமான நான்கு மாதங்களில் இளம் பெண் எடுத்த விபாரீத முடிவு..!
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ஓலைப்பாட்டியைச் சேர்ந்த நித்யா என்பவர் வேறு சமூகத்தைச் சேர்ந்த தினேஷ் (23) என்ற வாலிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
இந்த நிலையில் கணவர் வீட்டில் கூட்டுகுடும்பமாக வாழ்ந்து வந்த நித்யா நேற்று இரவு தூங்க சென்ற அவர் திடிரென தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்ட தினேஷ் மனைவி தற்கொலை செய்து உடலை மாய்த்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நித்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைதொடர்ந்து, மகளின் தற்கொலை சம்பவம் குறித்து நித்யாவின் தாய் தாரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தினேஷிற்கும், நித்யாவிற்கும் இடையே கடந்த ஒரு மாதமாக தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு வந்ததாகவும், அதனால் மனமுடைந்த நித்யா தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
திருமணமான நான்கே மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்து உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்