சுவையான பன்னீர் ப்ரைட் ரைஸ் ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
வடித்த சாதம் 1/2 கப்
பன்னீர் 10 பீஸ்
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்
சோயா சாஸ் 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
வெங்காயம் 1 நறுக்கியது
கேரட் 1 நறுக்கியது
குடைமிளகாய் 1/2 நறுக்கியது
மஷ்ரூம் 1/4 கப் நறுக்கியது
செய்முறை:
பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதில் சோள மாவு கலந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் சிறிது எண்ணெய் ஊற்றி இந்த பன்னீரை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதே வாணலில் எண்ணெய் சிறிது ஊற்றி அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
பின் வறுத்த பன்னீரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக நறுக்கிய கேரட், வெங்காயம், குடைமிளகாய், மஷ்ரூம் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் மிளகாய்த்தூள், மிளகுத்தூள் மற்றும் சோயா சாஸ் ஊற்றி கலந்து விட வேண்டும்.
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து மேலும் வடித்த சாதம் கலந்துக் கொள்ள வேண்டும்.
அனைத்தையும் ஒரு முறை நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான பன்னீர் ப்ரைட் ரைஸ் தயார்.
குழந்தைகளுக்கு இப்படி செய்து பள்ளிக்கு கட்டிக் கொடுங்க அப்பறம் பாருங்க டிபன் பாக்ஸ் காலியாக வரும்.