முருங்கைக்கீரை முட்டை பொரியல்..!
தேவையான பொருட்கள்:
முருங்கைக்கீரை ஒரு கப்
முட்டை ஒன்று
சின்ன வெங்காயம் பத்து
பச்சை மிளகாய் இரண்டு
உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
சீரகம் ஒரு ஸ்பூன்
எண்ணெய் இரண்டு ஸ்பூன்
மஞ்சள்தூள் கால் ஸ்பூன்
உப்பு தேவையானது
செய்முறை:
முருங்கைக்கீரையை பூச்சுகள் இல்லாமல் சுத்தம் செய்து நீரில் அலசி தனியாக வைக்கவும்.
இரண்டு சின்ன வெங்காயம், பத்து சின்ன வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு சிறிய கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் கால் ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் இதில் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கைகீரை, உப்பு சேர்த்து கீரை நன்றாக வேகும் வரை வதக்க வேண்டும்.
கீரை நன்றாக வெந்ததும் முட்டை கலவையை ஊற்றி வதக்க வேண்டும்.
முட்டை நன்றாக வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.
அவ்வளவுதான் முருங்கைக்கீரை முட்டை பொரியல் தயார்.