தக்காளி கடையல் செய்து பாருங்க..!
தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 20
பூண்டு – 6 பற்கள்
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பில்லை சிறிது
தக்காளி – 4
கல்லுப்பு – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
சாம்பார் தூள் – 1 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் கால் ஸ்பூன்
தண்ணீர் – 1 1/2 கப்
அரிசி மாவு – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை:
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் உளுந்து, ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
நறுக்கிய 20 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் ஆறு பற்கள் நசுக்கி சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அதில் கீறிய பச்சை மிளகாய், சிறிது கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
நறுக்கிய 4 தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
தேவையான உப்பு சேர்த்து அரை ஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு ஸ்பூன் சாம்பார்தூள், ஒரு ஸ்பூன் தனியாத்தூள், கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து கிளற வேண்டும்.
பின் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வரும் வரை விட்டு இறக்கவும்.
பின் ஒரு மத்தை எடுத்து சிறிது மசித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஸ்பூன் அரிசிமாவை சிறிது நீரில் கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
அதனை வேகவைத்த தக்காளி கடையலில் சேர்த்து நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கிளற வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான தக்காளி கடையல் தயார். இப்படி செய்து கொடுங்க பத்து இட்லி கூட சாப்பிடுவாங்க.