சுவையான சிக்கன் சிந்தாமணி செய்யலாமா..!
நாட்டுக் கோழி – 600 கிராம்
நல்லெண்ணெய் – ½ கப்
கடுகு – 1 சிட்டிகை
வெந்தயம் – 1 சிட்டிகை
காய்ந்த மிளகாய் – 10 எண்கள்
கறிவேப்பிலை – 10 எண்ணிக்கை
தண்ணீர் – 2 கப்
உப்பு – சுவைக்கேற்ப
மஞ்சள்தூள் – ½ டீஸ்பூன்
கொத்தமல்லி இலைகள் – 1 தேக்கரண்டி
நாட்டுக்கோழியை மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக சுத்தம் செய்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் சேர்த்து தாளித்துக் கொண்டு வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின் அதில் சிக்கன் துண்டுகள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி பின் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
பின் தண்ணீரை ஊற்றி வேகவைத்து தண்ணீர் சுண்டும்வரை கொதிக்கவைத்து கொத்தமல்லி தூவி இறக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான சிக்கன் சிந்தாமணி தயார்.