காரசாரமான மைசூர் மசாலா தோசை ரெசிபி..!
மைசூர் மசாலா தோசையானது நன்றாக காரசாரமாக இருக்கும். காரத்தை விரும்புவர்களுக்கு இந்த மைசூர் மசாலா தோசை ரொம்ப பிடிக்கும்.
அடடா சொல்லும்போதே நாவில் எச்சில் ஊறுதல்லவா.. இதோ சொல்ற வாங்க எப்படி செய்யலாம்னு.
தேவையான பொருட்கள்:
சட்னி செய்ய
- எண்ணெய்
- ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு
- ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன் சீரகம்
- நான்கு வரமிளகாய்
- ஐந்து பல் பூண்டு
- ஒரு பெரிய வெங்காயம்
- சிறிது புளி
- உப்பு
மசாலா செய்ய
- எண்ணெய்
- கடுகு
- அரை டீஸ்பூன் சீரகம்
- இரண்டு டீஸ்பூன் கடலைப்பருப்பு
- இரண்டு பெரிய வெங்காயம்
- மூன்று பச்சை மிளகாய்
- ஒரு துண்டு இஞ்சி
- மஞ்சள் தூள்
- பெருங்காயத்தூள்
- கருவேப்பிலை
- உப்பு
- மூன்று உருளைக்கிழங்கு கொத்தமல்லி இலை
- தோசை மாவு
செய்முறை:
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, சீரகம், வரமிளகாய், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
- பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, புளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி ஆறவைக்கவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் இதனை சேர்த்து கொஞ்சமாக நீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கடலை பருப்பு மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
- பின் பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை இடித்து சேர்க்கவும்.
- அடுத்ததாக பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை, தேவையான அளவில் உப்பு சேர்த்து கலந்து விடவும்.
- பின் இதில் வேகவைத்த உருளைக்கிழங்கை தோல் நீக்கி இதில் சேர்த்து, கொத்தமல்லி இலை தூவி கிளறிவிட வேண்டும்.
- கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்க வைக்க வேண்டும்.
- மசாலா கொதித்து கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும்.
- அடுப்பில் தோசைக்கல்லை வைத்து தோசை ஊற்றி அதன் மேல் தயாரித்த சட்னி தடவி அதற்கு மேல் மசாலா கலவையை வைத்து பின் எண்ணெய் தடவி வேகவைத்து எடுக்கவும்.
- அவ்வளவுதான் மைசூர் மசாலா தோசை தயார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.