சுவையான தால் மக்னி ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
கருப்பு உளுந்து – 3/4 கப்
ராஜ்மா பீன்ஸ் – 1/4 கப்
தண்ணீர்
தக்காளி – 4
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
மல்லி தூள் – 2 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
வெண்ணெய்
கிரீம்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ராஜ்மா மற்றும் கருப்பு உளுந்து ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து எட்டு மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
எட்டு மணி நேரத்திற்கு பிறகு ஒரு குக்கரில் சேர்த்து 6 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய்,வெண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
அனைத்தும் நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள்,சீரகத்தூள், மல்லித்தூள்,உப்பு மற்றும் வேகவைத்த பருப்புகளை சேர்த்து கலக்கவும்.
பின் அதில் கரம் மசாலா மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
கடைசியாக வெண்ணெய் மற்றும் கிரீம் சேர்த்து இறக்க வேண்டும்.