காரசாரமான கோழி மிளகு மசாலா..!
தேவையான பொருட்கள்:
சிக்கன் 500 கிராம்
வெங்காயம் 200 கிராம்
தக்காளி 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது 25 கிராம்
பட்டை,கிராம்பு,ஏலக்காய் 15 கிராம்
கறிவேப்பிலை சிறிது
கொத்தமல்லி இலை சிறிது
மிளகு 2 ஸ்பூன்
தனியா 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 5
சோம்பு அரை ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
தாளிக்க:
தேங்காய் எண்ணெய்
சோம்பு
காய்ந்த மிளகாய்
பூண்டு
செய்முறை:
ஒரு வாணலை அடுப்பில் வைத்து காய்ந்த மிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, சோம்பு சேர்த்து வறுத்து பின் ஆறவைத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் சேர்த்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.தக்காளி,உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
அனைத்தும் வதங்கியதும் சிக்கன் சேர்த்து வதக்க வேண்டும். சிக்கன் வெந்ததும் அரைத்த மசாலா பொடியை சேர்த்து வதக்கி கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் காரசாரமான கோழி மிளகு மசாலா தயார்.
