பாம்பே சட்னி ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
கடலை மாவு 3 ஸ்பூன்
தண்ணீர் 1/2 கப்
ஆயில் 2 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1/2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 2
கறிவேப்பிலை சிறிது
பெருங்காயத்தூள் சிறிது
வெங்காயம் 2
இஞ்சி 1 துண்டு
பச்சை மிளகாய் 4
உப்பு
மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
தக்காளி 1
எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை சிறிது
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு சேர்த்து அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாதவாறு கலந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.
பின் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பிறகு இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும், மேலும் 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். பின் அதில் கலந்து வைத்துள்ள கடலை மாவு கலவை சேர்க்கவும்.
கொஞ்சம் அதிகமாக நீர் சேர்த்துக் கொள்ளவும். சட்னி ஆறியதும் கெட்டியாகி விடும்.
கடைசியாக நன்றாக கொதித்ததும் கொத்தமல்லி இலைகள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
அவ்வளவுதான் பாம்பே சட்னி தயார். இதனை சப்பாத்தி, பூரி, தோசை ஆகியவற்றுடன் தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.