மஷ்ரூம் பட்டாணி கறி ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
பச்சை பட்டாணி 1 கப்
மஷ்ரூம் 250 கிராம்
எண்ணெய்
முந்திரி 8
தேங்காய் 1/2 கப்
தண்ணீர் 1/4 கப்
கடுகு 1/2 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
வெந்தயம் 1/4 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 ஸ்பூன்
வெங்காயம் 1
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி தூள் 1 ஸ்பூன்
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
தக்காளி 1
தண்ணீர்
உப்பு தேவையானது
கொத்தமல்லி இலை சிறிது
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பச்சை பட்டாணி சேர்த்து வேகவைக்க வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய மஷ்ரூம் சேர்த்து வதக்கி தனியே வைக்கவும்.
பட்டாணி நன்றாக வெந்ததும் அதனை வடிக்கட்டி தனியே வைக்கவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், முந்திரி சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு சேர்த்து பொரிந்ததும் பின் சீரகம், வெந்தயம் மற்றும் உளுந்து சேர்த்து பொரித்துக் கொள்ள வேண்டும்.
பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக மசிந்து வரும் வரை வதக்க வேண்டும்.
பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் முந்திரி விழுதை சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்தது தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மேலும் வேகவைத்த பட்டாணி சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
குழம்பு நன்றாக சுண்டிவரும் சமையத்தில் வதக்கி வைத்துள்ள மஷ்ரூம்களை சேர்த்து கலந்துவிட்டு கடைசியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை தூவி இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான மஷ்ரூம் பட்டாணி கறி தயார்.