பிரட் உப்மா.. காலை உணவு..!
தேவையான பொருட்கள்:
பிரட் 3 துண்டு
எண்ணெய் தேவையானது
முந்திரி 10
கடுகு அரை ஸ்பூன்
உளுந்து அரை ஸ்ப்ஒஒந்
கறிவேப்பிலை சிறிது
பச்சை மிளகாய் 1 நறுக்கியது
பெருங்காயத்தூள் அரை ஸ்பூன்
வெங்காயம் கால் கப்
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
தக்காளி அரை கப்
உப்பு தேவையானது
மஞ்சள்தூள் கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் அரை ஸ்பூன்
தண்ணீர் சிறிது
கொத்தமல்லி இலை சிறிது
செய்முறை:
ஒரு ஃபேனில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் பிரட் துண்டுகளை சேர்த்து லேசாக வறுத்துக் கொண்டு அதனை தனியே எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதே ஃபேனில் எண்ணெய் சிறிது சேர்த்து கடுகு ,உளுந்து, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் பச்சை மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பின் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பின் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி வதங்கியதும் உப்பு,மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி பின் அதில் சிறிது தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
வறுத்த பிரட் துண்டுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு அதனை மசாவில் சேர்த்து கலந்துவிட்டு கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கி விட வேண்டும்.
அவ்வளவுதான் பிரட் உப்மா தயார்.