ஆரோக்கியமான ரவா ஊத்தப்பம் ரெசிபி..!
ரவா ஊத்தப்பம் என்பது ஈசியாக செய்யக்கூடிய ஒரு உணவு வகையாகும். உங்களிடம் அரை மணி நேரம் இருந்தால் போதுமானது உடனே இந்த ஊத்தப்பம் ரெடியாகிவிடும். வாங்க இப்போ பார்க்கலாம் எப்படி செய்யலாம்னு..
தேவையான பொருட்கள்:
- ரவை ஒரு கப்
- தயிர் அரை கப்
- உப்பு
- தண்ணீர்
- வெங்காயம்
- தக்காளி
- பச்சை மிளகாய்
- கொத்தமல்லி இலை
- மிளகுத்தூள்
- நெய்
- எண்ணெய்
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் ஒரு கப் ரவை மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
- பின் இதில் அரை கப் தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
- கலந்த கலவையை அப்படியே 20 நிமிடங்களுக்கு மூடி வைக்க வேண்டும்.
- பின் மாவினை திறந்து கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
- வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லி இலை, மிளகுத்தூள் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- தேவைப்பட்டால் உங்களுக்கு விருப்பமான கேரட் ஆகியவற்றையும் துருவி சேர்த்து கொள்ளலாம்.
- தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவிக் கொண்டு ஒரு கரண்டி மாவினை எடுத்து ஊற்றி லேசாக பரப்பி சற்று தடிமனாக ஊற்றவும்.
- பின் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை ஊத்தப்பம் மேலே சேர்க்கவும். பிறகு தோசைக்கரண்டியை கொண்டு அழுத்தி விடவும்.
- சுற்றி நெய் அல்லது எண்ணெய் ஊற்றி மற்றொரு புறமும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
- அவ்வளவுதான் ஆரோக்கியமான ஊத்தப்பம் தயார்.
- இதற்கு தொட்டு சாப்பிட கார சட்னி, வெங்காய சட்னி மற்றும் தக்காளி தொக்கு ருசியாக இருக்கும்.