உதிரி உதிரியான புதினா புலாவ்..!
தேவையான பொருட்கள்:
- கட்டு புதினா
- 1/2 கட்டு கொத்தமல்லி தழை
- 2 கப் வெண் புழுங்கலரிசி
- 3 ஸ்பூன் நெய்
- 2 பெரிய வெங்காயம்
- சிறு துண்டு பட்டை
- 4 கிராம்பு
- 1 (அ) 2 ஏலக்காய்
- 2 பிரிஞ்சி இலை
- 1 அன்னாசி பூ
- 1 துண்டு இஞ்சி
- 10 சிறிய பூண்டு பல்
- 10 உடைத்த முந்திரி
- 5 பச்சை மிளகாய்
- உப்பு தேவைக்கு
- 1 டீஸ்பூன் சீரகத் தூள்
- 1 டீஸ்பூன் மிளகு தூள்
- 3 1/2 டம்ளர் தண்ணீர்
செய்முறை:
முதலில் புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சுத்தம் செய்து நீரில் கலசிக் கொள்ள வேண்டும்.
வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் புதினா இலை, கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரிசியை நீரில் நன்றாக அலசி ஊறவைக்க வேண்டும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நெய் விட்டு காய்ந்ததும் பட்டை,கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் வெங்காயம், முந்திரி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்ததாக இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
பின் அரைத்து வைத்துள்ள புதினா விழுதை சேர்த்து வதக்க வேண்டும்.
நன்றாக வதங்கியதும் தேவையான தண்ணீரை ஊற்றவும்.
தண்ணீர் சூடானதும் ஊறவைத்த அரிசியை சேர்த்து உப்பு சரிபார்த்து குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடங்களுக்கு வேகவைக்க வேண்டும்.
15 நிமிடம் கழித்து திறந்து லேசாக கரண்டி விட்டு கிளற வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான உதிரி உதிரியாக புதினா புலாவ் தயார்.