மக்ரோனி பாஸ்தா ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
- மக்ரோனி -1 1/2 கப்
- ப்ரோகோலி சிறிதளவு
- காப்சிகம் – 1/2 கப்
- முட்டை -1
- பச்சை மிளகாய் -காரத்திற்கு ஏற்ப
- குக்கிங் கிரீம் – சிறிதளவு
- எண்ணெய் தேவையான அளவு
- வெங்காயம் -1 நறுக்கியது
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் மக்ரோனி சேர்த்து கொதிக்க வைக்கவும்.
ப்ரோகோலியை சூடான நீரில் சிறிது நேரம் வைத்திருந்து அதனை எடுத்துக் கொள்ளவும்.
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், காப்சிகம், ப்ரோகோலி ஆகியவற்றை சேர்த்து அனைத்தையும் வதக்க வேண்டும்.
பின் உப்பு சேர்த்து வதக்கி அதில் முட்டை உடைத்து ஊற்றி வதக்க வேண்டும்.
பின் வேகவைத்த மக்ரோனி சேர்த்து கிளற வேண்டும்.
அடுத்தது குக்கிங் கிரீம் சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் மக்ரோனி பாஸ்தா தயார்.