சுவையான பீட்ரூட் அல்வா..! இனிப்பு..!
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் – 3
பால் – 2 கப்
கோவா – 3 தேக்கரண்டி
சர்க்கரை – 1/2 கப்
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு
நெய்
செய்முறை:
ஒரு வாணலில் நெய் சேர்த்து அதில் துருவிய பீட்ரூட் சேர்த்து வதக்கி பின் மூடி போட்டு 10 நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.
பின் அதில் பால் மற்றும் இனிப்பு இல்லாத பால்கோவா சேர்த்து 15 நிமிடங்களுக்கு வதக்க வேண்டும்.
பின் இதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து பால் வற்றும் வரை கிளறவும்.
கடைசியாக இதில் நெய் விட்டு வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து கலந்து கிளறி அல்வா பதம் வந்ததும் இறக்கி விட வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான பீட்ரூட் அல்வா தயார்.