சுவையான டேஸ்டில் பொடிக்கறி ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
எலும்பில்லா மட்டன் 500 கிராம் சிறிதாக நறுக்கவும்
எண்ணெய் தேவையானது
பட்டை 2
கிராம்பு 3
வெங்காயம் 100 கிராம்
இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை சிறிது நறுக்கியது
தண்ணீர் தேவையானது
உப்பு தேவையானது
மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
துருவிய தேங்காய் 4 ஸ்பூன்
செய்முறை:
ஒரு மிக்ஸியில் துருவிய தேங்காய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் மட்டன் துண்டுகள் சேர்த்து வதக்க வேண்டும்.
சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 5 விசில் வைத்து பிரஷர் அடங்கியதும் இறக்கவும்.
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்கி பின் கறி வேகவைத்த நீரை ஊற்றி கொதிக்க வைக்கவும்.
பின் வேகவைத்த மட்டன் சேர்த்து தண்ணீர் நன்றாக சுண்டும்வரை மிதமான தீயில் வதக்க வேண்டும்.
பின் நல்லா சுக்காவாக வந்ததும் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான டேஸ்டில் பொடிக்கறி தயார்.