திருப்பதி லட்டு இனி வீட்டிலே செய்யலாம்..! பார்ப்போமா..!
தேவையான பொருட்கள்:
* கடலை மாவு – 400 கிராம்
* நெய் – 1 லிட்டர்
* சர்க்கரை – 350 கிராம்
* பாதாம் – 50 கிராம்
* முந்திரி – 100 கிராம்
* உலர் திராட்டை – 50 கிராம்
* கற்கண்டு – 20 கிராம்
* ஏலக்காய் – 10 கிராம்
* பால் – 300 மிலி
* அரிசி மாவு – 100 கிராம்
* சர்க்கரை – 400 கிராம்
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து அதில் பால் ஊற்றி கரைத்து கொள்ள வேண்டும்.
- பின் அரிசி மாவினை பாலில் சேர்த்து கட்டிகள் இல்லாதவாறு கலந்து கரைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு கடலை மாவினை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
- கலவை ரொம்ப கெட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்த்து ஓரளவிற்கு கெட்டியாக கரைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அதன் மேலே ஒரு சல்லடை கரண்டியை வைத்து ஒரு கையால் பிடித்துக் கொண்டு மற்றொரு கரண்டியால் மாவினை எடுத்து சல்லடை கரண்டியில் ஊற்றி பொன்னிறமாக பூந்தியாக பொரித்து எடுத்து மற்றொரு பாத்திரத்தில் போடவும்.
- அதே நெய்யில் பாதாம், முந்திரி ஆகியவற்றை சேர்த்து பொரித்து தனியே வைக்கவும்.
- பின் இதில் உலர் திராட்சைகளை சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் பொரித்த பூந்தியில் பாதியினை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து பின் அதே பூந்தியில் சேர்க்கவும்.
- ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை சேர்த்து சர்க்கரை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து கம்பி பதம் வந்ததும் சர்க்கரை பாகினை பூந்தியில் ஊற்ற வேண்டும்.
- அதில் வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை ஆகியவற்றை சேர்த்து சிறிது நெய் விட்டு கிளறி அப்படியே சூடு லேசாக இருக்கும் அளவிற்கு அப்படியே விட வேண்டும்.
- பின் ஓரளவிற்கு கை பொறுக்கும் சூட்டில் பூந்திகளை உருண்டைகளாக பிடித்து லட்டுகளை தயார் செய்யலாம்.
- அவ்வளவு தான் திருப்பதி லட்டு தயார்.