சிக்கன் வாங்குனா இந்த மாதிரி ஒரு முறை செய்து பாருங்க..!!
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது)
* சிக்கன் – 700 கிராம்
* மிளகாய் தூள் – 3/4 டேபிள் ஸ்பூன்
* மல்லித்தூள் – 3/4 டேபிள் ஸ்பூன்
* சிக்கன் மசாலா – 1/2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
* தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
* நெய் – 1 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* தண்ணீர் – 1/4 கப்
* கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி தனியே வைக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கனை எடுத்து அதில் மிளகுத்தூள், மல்லித்தூள், உப்பு, வதக்கி வைத்த வெங்காயம், சிக்கன் மசாலா, மஞ்சள்தூள், மிளகுத்தூள், இஞ்சி பூண்டு விழுது, நெய், தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு ஊறவைக்க வேண்டும்.
அதே வாணலை அடுப்பில் வைத்து எண்ணெயுடன் ஊறவைத்த சிக்கனை சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி கிளறிவிட்டு வேகவைக்க வேண்டும்.
பின் மூடியை திறந்து நீர் வற்றும் வரை வேகவைத்து கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவிவிட்டு இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் அருமையான டேஸ்டில் சிக்கன் சுக்கா தயார்.