சாக்லேட் டோனட் இனி வீட்டிலே..!
தேவையான பொருட்கள்:
காய்ச்சிய பால் அரை கப்
சர்க்கரை 1 ஸ்பூன்
ஈஸ்ட் 1 ஸ்பூன்
மைதா 2 கப்
வெண்ணெய் 2 ஸ்பூன்
உப்பு ஒரு சிட்டிகை
பேக்கிங் சோடா கால் ஸ்பூன்
எண்ணெய் தேவையானது
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் காய்ச்சிய வெதுவெதுப்பான அரை கப் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் ஈஸ்ட் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து அந்த பாலை அப்படியே 10 நிமிடங்களுக்கு மூடி வைக்க வேண்டும்.
10 நிமிடங்களுக்கு பின் பார்க்கும்போது அந்த கலவை நன்றாக சேர்த்து பொங்கி இருக்கும் அதனை நன்றாக பிசைந்து எண்ணெய் தடவி ஒரு மணி நேரத்திற்கு அப்படியே மூடி வைக்கவும்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு மாவு நன்றாக பொங்கி இருக்கும்.
பின் அதனை இரண்டாக பிரித்து உருண்டை பிடித்து மாவில் நனைத்து நன்றாக திக்காக உருட்டிக் கொள்ள வேண்டும்.
பின் தேய்த்த மாவில் ஒரு கண்ணாடி கப் வைத்து டோனட் வடிவில் வெட்டிக் கொள்ளவும்.
பின் அந்த டோனட் எடுத்து ஒரு தட்டில் வைத்து அரை மணி நேரத்திற்கு ஊற விட வேண்டும்.
அரை மணி நேரம் கழித்து பார்த்தால் டோனட் நன்றாக உப்பி இருக்கும்.
அடுப்பில் ஒரு பேன் வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் செய்து வைத்துள்ள டோனட் எடுத்து போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக வேகவைத்து எடுக்க வேண்டும்.
இதுபோல மற்ற டோனட்களையும் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போ இந்த டோனட் மேலே உங்களுக்கு விருப்பமான சுவையில் சர்க்கரை பவுடர், சாக்லேட் சிரப் பயன்படுத்தி அலங்கரித்துக் கொள்ள வேண்டும்.
இப்போ அருமையான டேஸ்டில் சாக்லேட் டோனட் வீட்டிலேயே தயார்.