கல்யாணம் காது குத்துன்னு பத்திரிகை மேல பத்திரிகையா வந்துகிட்டே இருக்கு…!
அப்படி எத்தனை பேர் வச்சாங்க மொதலாளி…!?
அத ஏம்மா கேக்குற… காய்கறி மார்க்கெட்டுல முருங்கக்கா வாங்கிட்டு இருந்தப்ப பின்னாடி ஒருத்தன் மாமா நல்லா இருக்கீங்களான்னு கேட்டுட்டு பொது இடம்னு கூட பாக்காம அங்கேயே ஒரு பத்திரிகையை எடுத்து வச்சாம்மா…
சரி ஒரு பத்திரிகை தானேன்னு வாங்கிட்டு பெட்ரோல் பங்க் போன அங்க பங்களி மகன் கும்புட போன தெய்வம் நேர்லய வந்துடுச்சின்னு மகளுக்கு காது குத்துன்னு பத்திரிகைய எடுத்து வச்சிட்டு நா உன் வீட்டு விசேசத்துக்கெல்லாம் பணம் நகைன்னு நெறய பண்ணிருக்கேன் மறந்துடாதேன்னு சொல்லிட்டு போறான்..
சர்தான்னு பத்திரிகைய வாங்கிட்டு வீட்டுக்கு திரும்புனா போஸ்ட் மேன் வழிய மறிச்சி இந்தா உனக்கு ஒரு பத்திரிகை ஸ்பீட் போஸ்ட்ல வந்திருக்குன்னு கொடுத்துட்டு போறான்… அந்த பத்திரிகைக்கு கொறஞ்சது 5000 மொய் வைக்கணும்..
ஐய்யோ பாவம் மொதலாளி நீங்க…!?
அடப்போம்மா அப்படியே வீட்டுக்கு வந்தா மூத்த அக்கா, என் மகளுக்கு கல்யாணம் வச்சிருக்கேன். தாய்மாமா நீ மூனு பவுனாவது போடனும்னு உரிமையா கேட்டுட்டு பத்திரிகைய வச்சிட்டு போறா…
அவ்ளோதானா மொதலாளி…!?
இல்லம்மா இப்படியே சலூன்ல, மளிகைகடைல, பஸ்லன்னு ஒரு பதினாலு பேருமா… மாத்தி மாத்தி பத்திரிகைய வச்சி மொய்யிக்கு என்ன பண்றதுன்னு என்னய பொலம்ப வச்சிட்டாங்கம்மா…
மொத்தம் 14 பேரா மொதலாளி…!?
இல்ல 15 ஆவதா ஒருத்தன் பத்திரிகையோட வந்தாம்மா…
ஐய்யோ மொதலாளி அழாதீங்க…
இது அழுக இல்லம்மா ஆனந்த கண்ணீர்…!
ஆனந்தக் கண்ணீரா…!?
ஆமாம்மா… பத்திரிகைய வச்சிட்டு அவன் சொன்னான்… மாமா நீங்க வந்தா மட்டும் போதும் மொய் எதுவும் செய்ய வேணாம்னு சொல்லிட்டாம்மா…!
– வீரபெருமாள் வீர விநாயகம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..