தமிழகத்தில் விமானக் கட்டணம் 3 மடங்காக உயர்வு!!!
விமானத்தில் பயண நேரம் குறைவாக இருப்பதினால் , விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
சாதாரண நாட்களில் இருக்கும் பயணக் கட்டணத்தை விட இப்போது பயணக்கட்டணம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
தீபாவளி பண்டிகை வருவதை ஒட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வாழும் மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
பேருந்துகள் மற்றும் ரெயில்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக நிரம்பி வழிகிறார்கள்.
தென் மாவட்டங்களுக்கு போகும் ரெயில்கள் மற்றும் பேருந்துகளில் டிக்கெட்கள் இல்லை. அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்திலும், ஏற்கனவே பயணிகள் முன்பதிவு செய்து விட்டனர்.
ஆதலால் விமானப்பயணத்தில் நேரம் குறைவு என்பதால் விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
நேற்று முதல் சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, சேலம், மதுரை, கோவை செல்லும் விமானங்களில் வழக்கத்தை விட பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
பெரும்பாலான டிக்கெட் விற்று தீர்ந்து விட்டது. ஒரு சில உயர் வகுப்பு டிக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. அந்த உயர் வகுப்பு டிக்கெட் கட்டணமும் மிக அதிகமாக உள்ளது. வழக்கமான பயணக் கட்டணத்தை விட தற்போது 3 மடங்கு அதிகரித்து காணப்படுகிறது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.