கொடைக்கானல் படகு சவாரிக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!
கொடைக்கானல் ஏரி சாலையில் அமைந்துள்ள நகராட்சி படகு குழாமில் பணிகள் முடிவுறாத நிலையில் படகு இல்லம் திறக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது .
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நகராட்சி சார்பில் நட்சத்திர ஏரியில் அமைந்துள்ள படகு இல்லம் சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
தொடர்ந்து பணிகள் முடிவுறாத நிலையில் கடந்த வாரம் முதலமைச்சரால் காணொளி காட்சி மூலமாக படகு இல்லமானது திறக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து படகு இல்லத்தில் தடுப்பு கம்பிகள் , பாதுகாப்பு வசதிகள் முறையாக மேம்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது . மேலும் சுற்றுலா பயணிகளை வைத்து சோதனை ஓட்டம் செய்தது குறிப்பிடத்தக்கதாக இருந்து வருகிறது.
மேலும் அவசரகதியில் திறக்கப்பட்டுள்ள படகு இல்ல பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கையும் எழுந்துள்ளது.