February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending அரசியல் இந்தியா

இட ஒதுக்கீடு கோரி கர்நாடகத்தில் முழு அடைப்பு

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு கோரி கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இட ஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. முழு அடைப்புக்கு 700-க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனாலும், அரசு பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்குகின்றன. பள்ளிகள் செயல்படுகின்றன. இதனால் பெரும்பாலான இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை. ஒரு சில இடங்களில் வாடகைக் கார்கள், லாரிகள் இயக்கப்படவில்லை.

இதனிடையே, முழு அடைப்பை முன்னிட்டு கன்னட அமைப்பினர் மற்றும் ஆதரவு அமைப்பினர் ஆங்காங்கே ஊர்வலம் நடத்தி வருகின்றனர். ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளன. திருப்பதி-மங்களூரு வழித்தடத்தில் பாரங்கிப்பேட்டை என்ற இடத்தில் பேருந்து மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கினர். இதில், பேருந்தின் கண்ணாடி உடைந்தது. போராட்டக்காரர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது எனவும் முதலமைச்சர் எடியூரப்பா கேட்டுக்கொண்டுள்ளார். போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

உசேன் போல்ட்டை வீழ்த்திய மேலும் ஒரு கம்பாலா வீரர்

Digital Team

ஐஐடி பெண்கள் கழிவறையில் வீடியோ எடுத்த பேராசிரியர்; அதிர்ச்சியில் மாணவிகள்

Digital Team

இறுதிகட்ட படப்பிடிப்பில் தனுஷின் கர்ணன்

Digital Team

இந்தியன்-2 விபத்து; கமல், சங்கர் இருவருக்கும் போலீசார் சம்மன்?

Digital Team

“ரஜினிக்கு துணிச்சல் இருக்கிறதா”? – விடுதலை சிறுத்தைகள் வன்னியரசு கேள்வி

Digital Team

மாற்றங்களை கொண்டுவரவே நீதித்துறையில் பழமையான சட்டங்களை நீக்கினோம்…! பிரதமர் நரேந்திர மோடி

superadmin
You cannot copy content of this page
Madhimugam