ஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை – பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் !

ஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள ராதா கிருஷ்ணன் விளையாட்டு மையதானத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளை அமைச்சர் செங்கோட்டையன் தொடக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு புகார் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ஆசிரியர் தகுதி தேர்வில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை என்றும் புகார் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில் முறைகேடு நடைபெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

சேலம் மாவட்டத்தில் கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டதாக சொல்வதையும் செங்கோட்டையன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

What do you think?

டெல்லி வன்முறை சம்பவம் : டெல்லி காவல்துறையினருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு!

மத்திய அரசுக்கு எதிராக பொங்கிய ரஜினிகாந்த் !