ஊழல்வாதிகளுக்கு இடமில்லை..! தற்போது ட்ரெய்லர் வெளியீடு..!
மதுராந்தகம் அருகே பாரதிய ஜனதா கட்சி சார்பாக அன்னதானம் வேட்டி சேலை வழங்கிய தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம். மூன்றாவது முறை பிரதமராகும் மோடி தமிழகத்தில் கொண்டாடும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் கொண்டாட்டம்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒன்றிய தலைவர் பகதூர் சேட் ஏற்பாட்டில் அச்சரப்பாக்கம். பெரும்பேர்கண்டிகை கிராமத்தில் உள்ள பறவைகள் முதியோர் இல்லத்தில் தேசிய சிறுபான்மையின செயலாளர் வேலூர் இப்ராஹிம்,சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதியோர் இல்லத்தில் உள்ள அனைவருக்கும் மதியம் அருஞ்சுவை உணவு அன்னதானம் மற்றும் வேட்டி சேலைகளை வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய சிறுபான்மையினை செயலாளர் வேலூர் இப்ராஹிம் கூறியதாவது. சமூக நீதி காவலர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் மூன்றாவது முறையாக ஆட்சி என்பது பாரத மக்களுக்கு மட்டுமல்ல உலக தலைவர்கள் அனைவரும் வரவேற்கக் கூடிய நல்ல தருணமாக இருக்கிறது.
நாளைய மறுதினம் பதிவேற்பு விழாவில் அனைத்து மதத்தினரும்,அனைத்து மக்களும் ஒன்றிணைந்து வரவேற்க தயாராக இருக்கிறார்கள்.பாரதம் உலகின் குருவாக மாறிக் கொண்டிருக்கிறது. பாரதப் பிரதமர் மூன்றாவது முறையாக பங்கேற்கும் நிகழ்வை தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சந்தோஷமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
ஏழை எளியோருக்கு உணவளித்துக் கொண்டிருக்கிறோம் அச்சரப்பாக்கம் மசூதியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பிரார்த்தனை செய்கிறோம். பல்வேறு திருக்கோயிலும் சிறப்பு வழிபாடு செய்ய இருக்கிறோம்.
இதுவரை பலரும் நடத்தி வந்த ஊழல்களை வெளிப்படுத்தி இருக்கக்கூடிய ஊழல் அமைச்சர்களை சிறைக்கு தள்ளக்கூடிய நாட்களாக இருக்கும்.
அதிமுக போன்றவர்கள் எல்லாம் துணை முதல்வர் கனவை எதிர்பார்த்துக் கொண்ட நிலையில் போதை பொருள் விற்பனையில் தொடர்பு இருப்பதாக செய்திகள் கூறிக் கொண்டிருக்கிறது.
அந்த அடிப்படையில் துணை முதல்வர் ஆவதற்கு முன்னால் திகார் சிறைக்கு செல்வார். பிரதமருடைய மூன்றாவது முறை என்பது ஏற்கனவே அவர் சொல்லி இருக்கிறார். 10 ஆண்டு கால நிறைவு பெற்ற பிறகு தற்போது ட்ரெய்லர் வெளியாக உள்ளது.
நிஜமான, ஒரு உண்மையான வளர்ச்சிக்கான பாரதத்தை இனி தான் சந்திக்கப் போகிறது. அதில் ஊழல்வாதிகளுக்கு இடமில்லை குறிப்பாக அதிமுக வினருக்கும், அதிமுக கூட்டணியின் நயவஞ்சகர்களுக்கும் தமிழகத்தில் இடமில்லை என்பதை எடுத்துச் சொல்கிறோம். என இவ்வாறே அவர் பேசியுள்ளார்.
– பவானி கார்த்திக்