ஒன்றிய அரசை கண்டித்து பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் ரயில் மறியல்
ஒன்றிய அரசை கண்டித்து பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிப்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பஞ்சாப், அரியானா மற்றும் உத்தரப்பிரதேச மாநில எல்லைகளில் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், விவசாயிகள் தொடர்ந்து நடத்தி வரும் போராட்டத்தால் டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
காவல்துறையின் போக்கை கண்டித்து பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.