பெருங்குடல் புற்றுநோய் வர இந்த உணவுகள் தான் முக்கிய காரணம்..!!
இந்த 4 உணவுகள அடிக்கடி சாப்பிட்டா பெருங்குடலில் புற்றுநோய் கட்டிகள் வருமாம்….
உணவுகள் நம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆரோக்கியமற்ற உணவுகள் உங்கள் செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, புற்றுநோய் கட்டிகளையும் உண்டாக்கும்.
நாம் சாப்பிடும் சில உணவுகள், உடலில் புற்றுநோய் கட்டிககள் வளரும் என்கிறார்கள் மருத்துவர்கள். புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியைத் தூண்டும் சில உணவுகள் பற்றி தெரிந்துகொள்ளலாம் .
உண்மையில், ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் நடத்திய ஆய்வில், சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் அதிகம் உள்ள உணவுகள் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.
மேலும், சில உணவுகளும் நாள்பட்ட சுகாதார பிரச்சனைகளை ஏற்படுத்துவதுண்டு. சர்க்கரை பானங்கள் மற்றும் நொறுக்கு தீனிகள் மிகவும் சுவையாக இருக்கும்.
இனிப்பு உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும், ஆனால் அதிக சர்க்கரை எடுத்துக்கொண்டால் மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படும்.. என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்க்கரை நிறைந்த பானங்களை குடிப்பதற்கு பதிலாக வெறும் தண்ணீரை அதிகம் எடுத்துக்கொள்ளலாம் அது உடலை என்றும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.
பன்றி இறைச்சி மற்றும் பிற சிவப்பு இறைச்சிகள் பர்கர் போன்ற பல உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது.
இதனால் பெருங்குடலில் புற்றுநோய் அபாயம் ஏற்படும்.. எனவே சிவப்பு இறைச்சிகள் எடுத்துக்கொள்வதை தவிர்க்கலாம்.., இறைச்சி உணவிற்கு பதிலாக புரதம் அல்லது டோஃபு போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்..
பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஹாட் டாக் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் மற்றும் பாதுகாப்புகளைக் கொண்டிருக்கின்றன.
இந்த சேர்க்கைகள் உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம் மற்றும் உடலில் புற்றுநோய் கட்டிகளை வளர்க்கலாம். குறிப்பாக வயிறு மற்றும் உணவுக்குழாய் பகுதிகளில் புற்றுநோய் கட்டிகள் வளர வழிவகுக்கும்.
ஆதலால், பதப்படுத்தபட்ட உணவுகளை எடுத்துக்கொள்வதை முற்றிலும் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மது பெரும்பலான இளைஞர்கள் நண்பர்களுடன் சேர்ந்து அதிகமாக மது அருந்துகிறார்கள். அதிகமாக மது அருந்துவது வாய், தொண்டை மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும்.
அதிகப்படியான ஆல்கஹால் உங்கள் ஒட்டு மொத்த வாழ்க்கையையே சீர்குலைக்கும். ஆதலால், இந்த ஆரோக்கியமற்ற பழக்கத்தை முற்றிலும் கைவிடுவது உடலுக்கும் வாழ்க்கைக்கும் நல்லது.
இறுதிக் குறிப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆரோக்கியமற்ற உணவுகள் உண்மையில் புற்றுநோய் கட்டி வளர்ச்சியை பாதிக்கும். அதனால், அதிகமாக அந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம்.
நீங்கள் சாப்பிடும் உணவுகள் குறித்து மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். பதப்படுத்தப்படாத உணவுகளை உண்ணுங்கள், சர்க்கரைப் பொருட்களை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.நோயின்றி வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும் .
-நிரோஷா மணிகண்டன்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..