அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள துணிவு படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் படு வேகமாக நடைபெற்று வருகிறது. அந்த படத்தின் இயக்குனரும் பல தனியார் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்து வருகிறார். இந்நிலையில் மக்கள் பல எதிர்பார்ப்புகளுடன் மக்கள் துணிவு படத்தை பார்க்க வருவார்கள் அதை பூர்த்தி செய்யவில்லை என்றால் ஏமாந்துபோவார்கள் என்று பேசியுள்ளார்.
விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் இரண்டு படங்களும் 8 ஆண்டுகள் கழித்து ஒரே நாளில் வெளியாகவுள்ளது. இதனால் இரு படகுழுவும் தங்களின் ப்ரோமஷன்களை வேகப்படுத்தியுள்ளனர். துணிவு படத்தின் ப்ரோமொஷன்காக அப்படத்தின் இயக்குனர் எச்.வினோத் பல யூட்யூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார். தற்போது பேட்டியளித்துள்ள எச்.வினோத் துணிவு படத்தை பற்றி பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், துணிவு படத்தில் அஜித்தின் லுக்கின் சிறிய முன்னோட்டத்தை பார்த்ததற்கே ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் துணிவு படக்குழு வெளியிடவுள்ள டீஸர், ப்ரோமோ களை பார்த்தால் என்ன செய்ய போகிறார்கள் என்று புயவில்லை என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், துணிவு படம் ஒரு வங்கி கொள்ளை சம்மந்தப்பட்ட படமென்று ரசிகர்கள் பல எதிர்பார்ப்புகளுடன் திரையரங்கு வருவார்கள் ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையவில்லை என்றால் ஏமாற்றம் தான் அடைவார்கள் என்றும், இதையெல்லாம் நினைவில் வைத்துதான் படத்தை உருவாக்கியுள்ளேன் என்று அந்த பேட்டியில் பேசியுள்ளார்