நாடு முழுவதும் மார்ச் 10-ம் தேதி ரயில் மறியல் போராட்டமா..??
நாடு முழுவதும் மார்ச் 10-ம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளது.
விவசாய விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கான டிராக்டர்களில் டெல்லி நோக்கி புறப்பட்டனர்.
டெல்லி எல்லைக்குள் விவசாயிகளை நுழையவிடாமல் மத்திய அரசு கம்பிவேலி தடுப்புகளையும் தடுப்பு சிமெண்ட் கட்டைகளையும் வைத்து தடுக்கமுயன்றனர்.
தடுப்பு சுவர்களை எழுப்பி விவசாயிகளை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளையும், தண்ணீர், ரப்பர் குண்டுகளையும் மழைபோல வீசி தாக்கினர்.
இந்த தாக்குதலின் போதே பேச்சுவார்த்தையும் நடந்தது. பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மீண்டும் நடந்த தாக்குதலில் கியான்சிங் என்ற 65 வயது விவசாயி உயிரிழந்தார்.
இந்நிலையில், நாடு முழுவதும் மார்ச் 10-ம் தேதி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
மார்ச் 10 நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளது.
டெல்லியில் போராட்டம் நடத்தும் முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும், நாடு முழுவதிலும் இருந்து மார்ச் 6-ம் தேதி விமானம், ரயில், பேருந்து மூலம் விவசாயிகள் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்..
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.