February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending அரசியல் தமிழ்நாடு

“எழுவர் விடுதலையில் உத்தரவிடும் அதிகாரம் எங்களுக்கு இல்லை”! : தமிழக அரசு வைவிரிப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்து உத்தரவிடும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

7 பேரை விடுவிக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்து தன்னை சட்டவிரோதமாக சிறையில் வைத்துள்ளனர் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று (புதன்) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அமைச்சரவையின் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும், ஆளுநர் கையெழுத்து கூட போட தேவையில்லை என்றும் நளினி தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது என்றும், அதுதொடர்பாக எந்த உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை எனவும் தெரிவித்தார். ஆளுநருக்கு அனுப்பிய தீர்மானம் என்பது வெறும் பரிந்துரை மட்டுமே, அவருக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, நளினி சட்டப்பூர்வமாக சிறையில் இருக்கிறாரா? அல்லது சட்டவிரோதமாக சிறையில் இருக்கிறாரா? என்பது குறித்து அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தெளிவுபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணை வரும் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related posts

அதிகரிக்கும் கொரோனா வைரஸ் உயிரிழப்பு, சீனாவில் 636 பேர் பலி!

Digital Team

100 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச விமானப் பயணம் – சூர்யாவின் அதிரடி திட்டம்!

Digital Team

காங்கிரஸுக்கு மாஸ்டர் ஆகிறாரா விஜய்?

Digital Team

குளத்திற்குள் சரிந்த 8 வீடுகள்; வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பிய அதிசயம்!

Digital Team

தமிழகத்தில் மதுபானங்கள் விலை உயர்வு – குடிமகன்கள் கலக்கம்!

Digital Team

லாரிகள் வேலை நிறுத்தத்தால் ஆவின் பால் தட்டுபாடு இல்லை

Digital Team
You cannot copy content of this page
Madhimugam