குடும்பத்தில் மூத்த மகள்கள் சந்திக்கும் சில நோய்க்குறிகள்..!
1. பொறுப்புணர்வு: மூத்த மகள்கள் எப்போதும் எல்லா விஷயங்களிலும் பொறுப்புணர்வுடன் காணப்படுவார்கள். தங்களுடன் பிறந்தவர்களை நன்றாக கவனித்து கொள்வார்கள்.
2. பரிபூரணத்துவம்: அவர்களின் பெற்றோரின் எண்ணங்களை பூர்த்தி செய்ய பாடுபடுவார்கள். எந்த துறையிலும் தலைசிறந்து விளங்க முயற்சிப்பார்கள்.
3. முதிர்ந்த நடத்தை: மூத்த மகள்களுடன் பிறந்தவர்களை விட இவர்கள் முதிர்ந்த நடத்தையுடன் இருப்பார்கள். இது அவர்களின் குழந்தை பருவத்தை சீக்கிரம் இழக்க வழிவகுக்கும்,
4. தலைமைப் பண்புகள்: மூத்த மகள்கள் தங்களின் வீட்டில் பொறுப்புகளின் காரணமாக தலைமை பண்பை ஏற்க்கிறார்கள். இது அவர்களின் தலைமை திறனை வளர்க்கிறது. இதனால் அவர்கள் அலுவலகத்தில் விருப்பத்துடன் தலைமையை ஏற்க்கிறார்கள்.
5. உடன் பிறந்தவர்களுடன் மோதல்: மூத்தவர்கள் சிறிது அதிகார எண்ணத்துடன் தங்களின் இளையவர்களுடன் சண்டைகளில் ஈடுபட்டு மனக்கசப்புடன் மோதல் உண்டாகிறது.
6. உணர்ச்சிச் சுமை: மூத்தவர்கள் தங்களின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களின் நல்வாழ்விற்கு பொறுப்புகளை ஏற்று அவர்களின் மனதில் உணர்ச்சிகளை சுமந்து வருகிறார்கள்.
7. சுய தியாகம்: இவர்கள் தங்களுடன் பிறந்தவர்கள் மற்றும் பெற்றோர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களின் சொந்த தேவைகளை தியாகம் செய்கிறார்கள்.
8. குற்றவுணர்வு: மூத்தவர்கள் அவர்களுடைய சொந்த தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்போது குற்றவுணர்வை உணர்கிறார்கள்.
9. சாதனைகள்: மூத்தவர்கள் பெரும்பாலும் சாதிக்கும் எண்ணம் கொண்டிருப்பார்கள். இவர்கள் செய்யும் சாதனைகள் மூலம் தங்களை நிரூபிக்க முயற்ச்சிப்பார்கள்.
10. முன்மாதிரி அழுத்தம்: மூத்தவர்களுடன் பிறந்த உடன்பிறப்புகளுக்கு முன்மாதிரியாக திகழ மன அழுத்தத்தை ஏற்க்கிறார்கள். பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்ற இவர்கள் சில நேரங்களில் மன அழுத்தத்தை சந்திக்கிறார்கள்.