சீர்காழி திருஞானசம்பந்தருக்கு திருக்கல்யாணம்..!!
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகேயுள்ள ஆச்சாள்புரத்தில், சிவலோக தியாகேசர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தனி சன்னதியில் திருஞானசம்பந்தர் திருமணக்கோலத்தில் காட்சி கொடுக்கிறார். திருஞானசம்பந்தர் திருக்கல்யாணத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் திருமணம் ஆகும் என்பது ஐதீக உண்மை.
மூல நட்சத்திரம் உள்ளவர்கள்.., இத்திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டால் பிரச்சனைகள் தீருமாம். வருடந்தோறும் வைகாசி மாதம், திருஞானசம்பந்தருக்கு திருக்கல்யாணம் நடைபெறுமாம்.
அதைபோல் இந்த ஆண்டும் , திருஞானசம்பந்தருக்கு திருவீதி ஊர்வலம் மற்றும் மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது, இதனை தொடர்ந்து அன்று மாலை ஊஞ்சல் உற்சவம் மற்றும் திருஞானசம்பந்தர், பூர்ணாம்பிகைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து சிறப்பு தீப ஆராதனைகள் நடைபெற்றது, இதில் ஆயிரம் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..