முருகுமாறன் வெற்றி செல்லும் – திருமாவளவன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முருகுமாறன் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார் கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முருகுமாறன் 84 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கையின்போது 102 தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டதால், அந்த வாக்குகளை ஆய்வு செய்யக்கோரியும், முருகுமாறனின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், காட்டுமன்னார்கோவிலில் முருகுமாறன் பெற்ற வெற்றி செல்லும் என அறிவித்தது. மேலும், 102 தபால் வாக்குகளை ஆய்வு செய்யக்கோரிய திருமாவளவனின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

What do you think?

கிரிக்கெட்டில் மட்டுமல்ல பானிபூரி செய்வதிலும் தோனி தல தான்!

சோதனை நல்லது! – அஜித் வழியில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்