திருவண்ணாமலை மண் சரிவு…!! துணை முதல்வர் உதயநிதி அளித்த உறுதி…!!
மண் சரிவில் உயிர் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் நிவாரண நிதியும். மலையடி வாரத்தில் குடியிருப்பவர்கள் வெளியேற விருப்பப்பட்டால் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தரப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..
திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சார்ந்த 7பேர் மண் சரிவில் சிக்கி உயிர் இழுந்துள்ளனர். மண் சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களை தமிழக துணைமுதல்மைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிப்பொருட்களை வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் விபத்தில்சிக்கியவர்கள் உயிருடன் வருவார்கள் நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்த்தோம், ஆனால் பெரும் துயர செய்தி மட்டுமே வந்தது. இந்த மண்சரிவில் சிக்கி உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியாக வழங்க உத்தரவிட பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் இப்பகுதியில் குடியிருப்பவர்கள் இங்கிருந்து வெளியேற விரும்பினால் முதல்வரிடம் கலந்தாலோசித்து அவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தற்போது வரை நான்கு தொடர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள மூன்று உடல்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு பணித்துறையினர் தீவிரமாக பணியாற்றி வருவதாகவும் இவ்வாறே அவர் பேசினார்..
இந்நிகழ்வின் போது உடன் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை உட்படபலரும் இருந்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..