திருவிடைமருதூர் ராமலிங்கம் கொலை வழக்கு..! என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி..!
கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மதம் மாற்றம் செய்வதை தட்டி கேட்டு மதம் மாற்றம் செய்பவர்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர்., கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி ராமலிங்கத்தை வழிமறித்த சில மர்ம கும்பல் மத நல்லினத்திற்கு எதிராக இனிமே குரல் எழுப்பக்கூடாது என கூறி (வெ ட் டி கொலை ) செய்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
அதன் பின் அந்த வழக்கில் முகம்மது ரியாஸ், நிஜாம் அலி, அசாருதீன், ரிஸ்வான், சர்புதீன் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்தனர். ராமலிங்கம் கொலை வழக்கில் இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள 6 பேரை பிடிக்க நடவடிக்கைகள் தீவிரமாகப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் ராமலிங்கம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கொலையாளிகளுக்கு சம்மந்தமான 25 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கும்பகோணம் அருகே திருபுவனம், திருமங்கலக்குடி, மேலக்காவேரி, கருப்பூர் உள்ளிட்ட 25 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இன்று காலை முதலே என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதால் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..