திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. முன்னாள் அமைச்சர் கே.பி.பி. சாமி காலமானார்!

மறைந்த கலைஞர் கருணாநிதியிடம்  மிகவும் நெருக்கமாக இருந்த திமுக முன்னாள் அமைச்சரும் திருவொற்றியூர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 58

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்த கே.பி.பி.சாமி, சென்னை திருவொற்றியூர் கே.வி.கே.குப்பத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை இயற்கை எய்தினார்

கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற  சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு திருவொற்றியூர் தொகுதி எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டு மீன்வளத்துறை அமைச்சர் ஆனார்.2006-2011 வரை தமிழக மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகித்த அவர், திமுகவின் மாநில மீனவ அணி செயலாளராக இருந்து வந்தார்.அதனைத் தொடர்ந்து 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றவர் கே.பி.பி.சாமி

மறைந்த கே.பி.பி.சாமியின் உடல் அஞ்சலிக்காக திருவொற்றியூர் கே.வி.கே. குப்பத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திமுக மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். 

What do you think?

டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு !

பிரசாந்த் கிஷோர் மீது நம்பிக்கைத் துரோகம், மோசடி பிரிவுகளில் வழக்குப்பதிவு !