மன உளைச்சலால் தான் இந்த முடிவு..! மோகன்லால் அதிரடி..!!
மீண்டும் மலையாள நடிகர் சங்க தலைவராக மோகன்லால் மறுப்பு…
மலையாள சினிமாவை உலுக்கிய ஹேமா கமிட்டி அறிக்கையால் மலையாள நடிகர்கள் சிலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.
குறிப்பாக நடிகர் சங்க செயலாளர் சித்திக் மீது பல புகார்கள் கூறப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து முன்பே அறிந்திருந்த நடிகர் சங்க தலைவர் மோகன் லால் சம்பந்தப்பட்டவர்கள் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தார் என்று அவர் மீதும் விமர்சனங்கள் எழுந்தது.
இதைத்தொடர்ந்து நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து மோகன் லால் ராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து சங்க நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்தார்கள்.
இதனால் தற்போது மலையாள நடிகர்கள் சங்கத்திற்கு தற்காலிக நிர்வாக கமிட்டி அமைக்கப்பட்ட செயல்பட்டு வருகிறது. அடுத்த வருடம் ஜூனில் பொறுப்புக்குழுக் தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மோகன்லால் மீண்டும் தலைவராக வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக முன்னாள் துணைத் தலைவர் ஜெயரனு சேர்த்தலா நடிகர் சுரேஷ்கோபி ஆகியோரும் பழைய நிர்வாகிகள் மீண்டும் பதவிக்கு வர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர்.
இதை அடுத்து மோகன்லால் மலையாள நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தலைவராகலாம் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் தான் தலைவர் பதவியை மீண்டும் ஏற்கப் போவதில்லை என்று மோகன்லால் மறக்க தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது நடிகர் சங்க பிரச்சினைகளால் தேவையில்லாத மன உளைச்சலுக்கு ஆளாவதால் படங்களில் கவனம் செலுத்த முடியவில்லை என்று அவர் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது .
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..