பண வரவு அதிகரிக்க இந்த ஒரு மந்திரம்..!!
ஒரு மனிதன் வாழ்வதற்கு உயிர் எவ்வளவு முக்கியமோ அதேபோல் ஒரு மனிதன் வாழும் வரை பணமும் மிக முக்கியம் காரணம், பணம் இருந்தால் நம் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளம் என்ற காலம் போய் தற்போது, பணம் இருந்தால் மட்டுமே நம்மை மதிப்பார்கள் என்ற காலம் வந்துவிட்டது.
பகவான் கிருஷ்ணரே என்ன சொல்கிறார் என்றால்..? தனக்கு பிடித்த மூன்று மனிதர்களில் மூன்றாவது மனிதராக எவன் ஒருவன் தனக்கு பணம் வேண்டும் என்று கேட்கின்றானோ அவனை தனக்கு பிடிக்கும் என சொல்கிறார்.
அதாவது இந்த உலகில் ஒருவன் வாழ்வதற்கு பணம் எவ்வளவு முக்கியம் என்பதை அவன் கேட்கும் பொழுது பெருமாளுக்கு பிடித்த மனிதனாக ஆகிறான் என கூறுகிறார்.
அப்படி இருக்க ஒருவருக்கு பணம் இல்லை என்றால் அனைத்து சோகங்களும் கஷ்டங்களும் நம்மை வந்து சேர்ந்து விடும். அப்படி இருக்க பணம் ஒருவரது வாழ்வில் எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது.
நாம் எவ்வளவு தான் பணம் சம்பாதித்தாலும்.., பணம் சேர்த்து வைத்தாலும் பணம் செலவாகி கொண்டே இருக்கிறதா பண வரவு அதிகரிக்காமல் இருக்கிறது.., இந்த மந்திரத்தை சொல்லி வழிபட்டு பாருங்கள் பண வரவு என்றும் அதிகரிக்கும்.
“பொன்னும் மணியும் புவி ஆள் செங்கோலும் மென்பூந்துகிலும்
மின்னும் மகுடம் முதலாய பூணும் வியன் அழகும்
மன்னும் வல்வீரமும் வாகையும் ஆதிய வாழ்வு அனைத்தும்
நன்னுதற் செந்திரு மங்கைதன் நாட்டங்கள் நல்குபவே”..
இந்த மந்திரத்தை நீங்கள் உச்சரிக்கும் போது.., வீட்டில் மஹாலக்ஷ்மிக்கு தீபம் ஏற்றி வழிபட்டு விட்டு அதன் பின் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் அப்படி செய்தால் மட்டுமே பண வரவு என்றும் அதிகரிக்கும்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..