ஒரு காவலர் செய்யும் வேலையா இது! வீடியோ எடுத்த காவலர்! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்..!
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ராஜேந்திரன் நகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் பிரதீப்.
இவர், தான் பணிபுரிந்த பகுதிகளில் உள்ள சிறுமிகளிடம் நட்பாக பழகி, காதலில் விழவைத்து அவர்களை தனிமையில் அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
மேலும் அதனை வீடியோவாகவும் பதிவு செய்து மிரட்டி அடிக்கடி தனது ஆசைக்கு இனங்கும் மாறு மிரட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்படும் சிறுமிகள் நடந்த சம்பவம் குறித்து வெளியே தெரிந்தால் தனக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் அவமானம் எனக்கருதி புகார் தராமல் இருந்துள்ளனர்.
இந்தநிலையில் ஐதராபாத் ராஜேந்திரா நகரில் வசிக்கும் 15 வயது சிறுமியுடன் சில மாதங்களுக்கு முன்பு பிரதீப் பழகினார். ஒருநாள், அவரை தனிமையில் வரவழைத்து திருமண ஆசைக்காட்டி பலாத்காரம் செய்துள்ளார். வழக்கம்போல் இதையும் வீடியோ மற்றும் போட்டோக்கள் எடுத்துள்ளார்.
அதன்பிறகு அந்த சிறுமியை அடிக்கடி தன்னுடன் உல்லாசமாக இருக்க வருமாறு பிரதீப் அழைத்துள்ளார். இதற்கு சிறுமி மறுத்ததால் ரகசியமாக எடுத்த பலாத்கார வீடியோ மற்றும் போட்டோக்களை சிறுமியின் வாட்ஸ் அப்பில் அனுப்பி, நான் அழைக்கும்போது வரவில்லை என்றால் இவற்றை இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதனால் வேறு வழியின்றி அந்த சிறுமி, பிரதீப்புடன் அடிக்கடி நெருக்கமாக இருந்துள்ளார். அப்போது கருத்தரிக்காமல் இருப்பதற்காக சிறுமிக்கு தெரியாமல் மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து கொடுத்ததாக தெரிகிறது.
இதனால் சிறுமிக்கு உடல்நலம் பாதித்தது. இதுதொடர்பாக பெற்றோர் கேட்டபோது நடந்த சம்பவத்தை சிறுமி கூறினார்.
உடனே அதிர்ச்சியடைந்த பெற்றோர், கடந்த 26ம் தேதி ராஜேந்திரா நகர் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் பிரதீப்பை கைது செய்து அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு நடத்தினர்.
அதில் 50க்கும் மேற்பட்ட சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் இருந்தது. அவர்களையும் பிரதீப் மிரட்டி பலாத்காரம் செய்து மேலும் பலாத்காரம் செய்யப்படும் சிறுமிகளுக்கு கூல்டிரிங்ஸில் கருத்தடை மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார் வேரு ஏதேனும் பெண்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என தீவிர விசாரனையை மேற்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்