ஆதார் புதுப்பிக்க இதுவே கடைசி நாள்..!! ஆதார்மையம் அறிவிப்பு..!!
ஒரு இந்தியன் என்பதற்கு அடையாளமாக இருக்கும் ஆதார் அட்டையை டிசம்பர் 14ம் தேதிக்குள் புதுப்பித்துக்கொள்ள வேண்டுமென ஆதார் மையம் தெரிவித்துள்ளது..
ஆதார் அட்டையானது தற்போது இந்தியா முழுவதும் கட்டாயம் ஆக்கப்படுள்ளது… 4 வயது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லோரும் ஆதார் வைத்துள்ளார்கள்.. தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவில் எங்கு சென்றாலும் சரி இந்தியாவை தாண்டி பயணம் செய்ய வேண்டி இருந்தாலும் சரி ஆதார் அவசியம் என்ற நிலை இருக்கிறது..
வீடு,மனை வாங்க வேண்டி இருந்தாலும் சரி, வங்கியில் அக்கவுண்ட் ஓபன் செய்ய., புதிய வாகனம் வாங்க., லோன் எடுக்க என அனைத்திலும் ஆதார் காட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.. இவ்வளவு என் ஒரு மனிதன் இறந்த பின்பும் அவரை இடுக்காட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றாலும் ஆதார்தான் முதலில் கேட்கிறார்கள்..
தற்போது மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு கூட ஆதார் தான் முதல் ஆவணமாக காண்பிக்க வேண்டி இருக்கு.. இப்படி இருக்க அனைத்திலும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள இந்த அரசு ஆவணங்களுக்கும் பல விதிகள் உள்ளது..
ஆதார் புதுபித்தல் :
நம்முடைய அடையாள அட்டையான ஆதாரை 10 ஆண்டுக்கு ஒருமுறையாவது ஆதாரை புதுப்பிக்க வேண்டும்.
அதாவது நம்முடைய கைரேகைகள், கண் மற்றும் முகம் போன்றவற்றை 10 ஆண்டுக்கு ஒருமுறை மாற்றிவிட வேண்டும்..
ஆதாரை புதுப்பிக்கும் போது பெயர் மற்றும் முகவரியை சரி பார்த்துக்கொள்ள வேண்டும்..
வருகின்ற டிசம்பர் 14ம் தேதிக்குள் ஆதாரை புதுபித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு புதுபிக்கா விட்டால் நம்முடைய பழைய கைரேகையே இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது..
அதற்காக தமிழ்நாடு முழுவதும் அரசு ஆதார் முகாம்களை அமைத்துள்ளது.
14ம் தேதிக்கு மேல் புதுப்பித்தால் கட்டண சேவையானது 50 ரூபாய் வசுலிக்கப்படும்.
முக்கிய குறிப்பு :
வருகின்ற டிசம்பர் 14ம் தேதிக்குள் ஆதார் புதுப்பிக்கவில்லை என்றால் ஆதார் அட்டையை உபயோகிக்க முடியாது என சில போலியான செய்திகள் பரவி வருகிறது அதனை நம்ப வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
14ம் தேதிக்குள் புதுப்பித்தால் தற்போதைய கைரேகை இருக்கும் இதுதான் இல்லாவிட்டால் பழைய ரேகையே இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..